கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில், தமிழ் இளைஞர்கள் 11 பேர் கடத்தப்பட்டு, அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கப்பம் பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் காணாமலாக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்றக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நேவி சம்பத் என்றழைக்கப்படுபவரின் விளக்கமறியல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டது.
கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெட்டி ஆராச்சி என்பவரே நேவி சம்பத் என்றழைக்கப்பட்டவராவார். அவர், நீதிமன்ற உத்தரவின் கீழ், இன்று (29) வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post Top Ad
Wednesday, August 29, 2018
Home
Sri lanka
11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட குற்றச்சாட்டில் முன்னாள் கடற்படை அதிகாரிக்கு விளக்கமறியலில் நீடிப்பு
11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட குற்றச்சாட்டில் முன்னாள் கடற்படை அதிகாரிக்கு விளக்கமறியலில் நீடிப்பு
Tags
Sri lanka#
Share This
About vettimurasu
Sri lanka
Tags:
Sri lanka
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.