Breaking

Post Top Ad

Monday, July 16, 2018

வாகரை பிரதேசத்தில் குடும்பப் பெண்ணின் சடலம் வீட்டிலிருந்து மீட்பு

மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் பிரிவு கதிரவெளியிலுள்ள வீடொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலத்தைத் தாம் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரித்தனர்.


கதிரவெளி புதூர் கிராமத்தைச் சேர்ந்த மூன்று வயதுடைய குழந்தைக்குத் தாயான குடும்பப் பெண்  சுந்தரமூர்த்தி சுதர்ஷ‪pனி (வயது 23) என்பவரின் சடலமே திங்கட்கிழமை 16.07.2018 மீட்கப்பட்டுள்ளது.

சடலம் உடற்கூறாய்வுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் பற்றி மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages