Breaking

Post Top Ad

Monday, July 30, 2018

சபை அமர்வில் கலந்துகொள்ள தடை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட TMVP உறுப்பினர்ளுக்கு அமர்வில் கலந்துகொள்ளும்பொருட்டு கடிதங்கள்

மட்டக்களப்பு மாநகரசபையின் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு மட்டக்களப்பு மாநகரசபையின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர்கள் ஐந்து பேருக்கு கடந்த 19ஆம் திகதி நடைபெற்ற ஆறாவது அமர்வில் கலந்துகொள்ள ஒரு மாதகாலம் தடைவிதிக்கப்பட்டு  மாநகரசபை உறுப்பினர்களின் ஏகமனதான ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் தமக்கு  நாளை செவ்வாய்கிழமை (31ஆம் திகதி) நடைபெறவுள்ள 7வது அமர்வில் கலந்துகொள்வதற்கான கடிதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக உறுப்பினர் திருமதி செல்வி மனோகர் தவிர்ந்த நான்கு (04) உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர்.


தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர் திருமதி செல்வி மனோகர் ஊடகத்திற்கு தெரிவித்த கருத்து தொடர்பில் அவருக்கெதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பிலேயே இச் சம்பவம் 6வது அமர்வில் ஆரம்பமானது.


இதன்போது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர்கள் சபை தொடர்பில் முறையற்ற வார்த்தை பிரயோகங்களை செய்தது தொடர்பிலும் சபை நடவடிக்கைக்கு பங்கம் ஏற்படுத்தியது தொடர்பிலும் ஏனைய உறுப்பினர்களினால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதுடன் குறித்த ஐந்து உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட நிலையிலே கடந்த ஆறாவது அமர்வில் இவர்களுக்கு ஒருமாதகால தடை தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

தற்போது தமக்கு ஏழாவது சபை அமர்வில் கலந்துகொள்ளும்பொருட்டு மட்டக்களப்பு மாநகர சபை செயலாளர் தமக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக  நான்கு (04 ) உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர்.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages