Breaking

Post Top Ad

Tuesday, July 17, 2018

தமிழீழ விடுதலை கழகத்தின் 29வது வீரமக்கள் தின அஞ்சலி நிகழ்வு

தமிழீழ விடுதலை கழகத்தின் 29வது வீரமக்கள் தினம் வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள உமா மகேஸ்வரன் நினைவு இல்லத்தில் நேற்று ஜனநாயக மக்கள் விடுதலை முன்ணணியின் உப தலைவர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்) தலைமையில் நடைபெற்றுள்ளது. 


தமீழீழ மக்கள் விடுதலை கழகத்தின் மறைந்த உறுப்பினர்களையும், அனைத்து இயக்க போராளிகளையும் யுத்த காலத்தில் மரணித்த பொதுமக்களையும் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
அகவணக்கத்தை தொடர்ந்து கழகத்தின் கொடியை க.சந்திரகுலசிங்கம் ஏற்றிவைக்க கழகத்தின் போராளி ஒருவரின் தாயார் நினைவுச்சுடரினை ஏற்றி வைத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து தமிழீழ விடுதலை கழகத்தின் ஸ்தாபகரும், மறைந்த தலைவருமான க.உமாமகேஸ்வரன் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.


அஞ்சலி நிகழ்வினை தொடர்ந்து மரிணித்த போராளிகளின் படங்களை பார்வையிட்ட உறவுகள் பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
நிகழ்வில் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் ,கழகத் தோழர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், போராளிகளின் உறவுகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages