Breaking

Post Top Ad

Sunday, July 15, 2018

விடுதலைப் புலிகளின் காலத்தில் பெரும் குற்றச் செயல்கள் இருந்ததில்லை!! இன்று இலங்கைக்கு மரணதண்டனை தேவை என்கிறார் சிறிநேசன் MP


எமது எதிர்கால சமூகம் மிக மோசமான முறையில் சீரழிக்கப்பட்டு நடைப் பிணங்களாக ஆக்ககப்படுகின்ற ஒரு சூழ்நிலை இப்போது காணப்படுகின்றது. இன்று எமது நாட்டுக்கு எதிர்காலமே இல்லாத ஒரு சூழ்நிலை இருக்கின்றபடியால், இப்படியாக போதைவஸ்துக்கள் மூலம் எமது சமூகத்தை அழிக்கின்றவர்களை நிச்சயமாக தண்டிக்க வேண்டும். இவ்வாறான கயவர்களுக்கு நிச்சயம் மரணதண்டனை அவசியமாகும்.


என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.


மட்டக்களப்பில் ஞாயிற்றுக்கிழமை (15ஆம் திகதி ஞாயிறு) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

இவ்வாறான போதைப்பொருள் கடத்தல் காரர்கள் சிறைச் சாலையில் இருந்துகொண்டே  போதைப்பொருள் வர்த்டதகத்தை முகவும் லாபகரமாக நடத்திக்ெகாண்டு வருகின்றார்கள் என்றால் அவர்கள் திருந்துவதற்குரிய அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.

இவர்கள் மீண்டும் மீண்டும் தவறினை செய்துகொண்டிருப்பதால் அவர்களுக்கு உச்சபட்சமான மரணதண்டனை வழங்கப்படும்போது அதனைப்பார்த்தாவது மற்றயவர்கள் திருந்திக்கொள்ள வாய்ப்பாக இருக்கும்.

போதைப்பொருட் கடத்தலில் ஈடுபட்ட மிகப் பிரபலியமான 19 சக்கரவத்திகள் இப்போது சிறையில் இருப்பதாக சொல்லப்படுகின்றது. அவர்கள் சிறைக் கூடத்தில் இருந்துகொண்டே தமது வியாபாரத்தை செய்துகொண்டிருக்கின்றார்கள்.

என்னைப் பொறுத்தவரை நானும் இரக்கம் காட்டுபவன், ஆனால் சமூகத்தை சீரழித்து நாட்டை குட்டிச்சுவராக மாற்றக்கூடிய மோசமான நபர்களுக்கு இரக்கம் காட்டாமல் மரணதண்டனை வழங்கப்பட வேண்டும்.

இப்போது  அஸ்கிரிய பீடம் , மல்வத்து பீடம் போன்ற பௌத்த அமைப்புக்கள் கூட இவ்வாறானவர்களுக்கு இரக்கத்தை காட்டக் கூடாது என கூறியிருக்கின்றது.

போதைப் பொருட் கடத்தலுக்கு சில அரசியல்வாதிகள் கூட இயக்குனர்களாக இருக்கின்றார்கள் வெலே சுதா பிடிபட்டபோது ஒரு அரசியல்வாதியை கூறியிருக்கின்றார்,

எனவே கந்தையாவாக இருந்தாலென்ன, களுவண்டாசாக இருந்தாலென்ன, கனீபாவாக இருந்தாலென்ன இந்த வர்த்தகத்தில் யார் ஈடுபட்டாலும் உச்ச தண்டனையாக மரணதண்டனை வழங்கப்படவேண்டும்.

ஒரு காலத்தில் அதாவது விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் இப்படியான போதைப்பொருள் கடத்தல் இருக்கவில்லை, சிறுவர் துஸ்பிரயோகம் இருக்கவில்லை, ஆவாக் குழுக்கள் இல்லை, கிறீஸ் மனிதர்கள் இல்லை இவ்வாறு பெரும் குற்றச் செயல்கள் நாட்டில் இருக்கவில்லை.

இவ்வாறான செயல்களைச் செய்தால் பாரிய தண்டனை வழங்கப்படும் என்கின்ற அச்சத்தின் காரணமாக குற்றச் செயல்கள் நடைபெறவில்லை.

எனத் தெரிவித்தார்.







No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages