இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கருணாநிதியை காண கோபாலபுரம் படையெடுத்து வந்து அவரை பார்த்துவிட்டு சென்றுள்ளனர்.
பிரதமர் மோடி கருணாநிதி பற்றி ஸ்டாலின் மற்றும் கனிமொழியுடன் நலம் விசாரித்ததாகவும் அவர் விரைவில் குணமடைய பிராத்தனை செய்வதாகவும் அவர் ட்விட்டில் போட்டுள்ளார்.
அவருடைய மகன் மு.க.அழகிரிக்கு நேற்று இரவுக்கு மேல் வந்த தந்தை பற்றிய தகவலால் கலங்கிப் போயுள்ளார் என தெரிய வந்துள்ளது. ஆனால் என்ன தகவல் என உறுதி செய்யப்படவில்லை.
கடந்த வருடம் ஜெயலலிதா இறந்த வழக்கில் பல மர்மங்கள் இன்னும் விலகாத நிலையில் தற்போது கருணாநிதி உடல்நலம் குன்றி இருப்பதாகவும் ஆனால் அவர் உயிருடன் தான் இருக்கிறார் என்பதற்கு ஆதாரமாக ஒரு புகைப்படம் கூட வெளியிடாததால் மக்கள் கலகத்தில் உள்ளனர்.
மேலும் இன்று கலைஞர் திமுக தலைவராக பொறுப்பேற்று 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதால் இன்று ஏதாவது சோக செய்தியை வெளியிட்டால் அது பெரும் கலவரத்திற்கு வழிவகுக்கும் என்பதால் தற்போது எந்த செய்தியையும் வெளியிடாமல் இருக்கிறார்களா என பலர் கேள்வி எழுப்புகின்றனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.