Breaking

Post Top Ad

Tuesday, July 10, 2018

இளம் சமுதாயத்தினரை போதைப் பொருட் பாவனையிலிருந்து விடுவித்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம் - போதைப்பொருட் தடுப்ப வேலைத்திட்டம்

மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேச செயலக சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் போதைப்பொருள் பாவனை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு வேலைத் திட்டம் செவ்வாய்கிழமை (10ஆம் திகதி)  நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் போதைப்பொருட்கள் பாவனையால் இன்றைய சமூகத்திற்கு  ஏற்படும் தாக்கம் தொடர்பிலும், தொற்றா நோய்கள், தொற்று நோய்கள் பற்றியும் சிரேஷ்ட உளநல  வைத்தியர் ஜுடி ஜெயக்குமார்  இதன்போது மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.


இதன்போது,  நாவற்காடு நாமகள் வித்தியாலய அதிபர் த.கோபாலப்பிள்ளை, மண்முனை மேற்கு பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் பி.திருச்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


எதிர்கால சமுதாயத்தினைரை போதைப்பொருட் பாவனையிலிருந்து விடுவித்து ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் பொருட்டு மேற்படி நிகழ்ச்சித் திட்டம் அமைந்திருந்தது. இதன்போது 250 மாணவர்கள் கலந்துகொண்டனர்.












No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages