Breaking

Post Top Ad

Saturday, July 21, 2018

முறக்கொட்டான்சேனை - தேவபுரம் கழகங்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற IPL சாயலிலான DMCL கிரிக்கட் சுற்றுப் போட்டி

(து.நவா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் முறக்கொட்டான்சேனை, தேவபுரம் கிராமங்களில் உள்ள இளஞ்சுடர், கஜமுகன், நீலத்தாரகை ஆகிய விளையாட்டுக்கழகங்களை ஒன்றினைத்து இந்தியன் பிறிமியர் லீக் IPL சாயலில் நடாத்தப்பட்ட Dmcl கிரிக்கட் போட்டி பல சிறப்பம்சங்களுடன் இன்று 21ஆம் திகதி  நிறைவு பெற்றது,


இந்த தொடரின் ஆரம்ப நிகழ்வில்  தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் அலிஸாஹிர் மௌலானா,கோரளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சோபா ஜெயரஞ்சித், உப தவிசாளர் தருமலிங்கம் யசோதரன், மற்றும் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான சுதர்சன் மற்றும் கமலேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது, 

ஆரம்ப நாள் நிகழ்வில் உரை நிகழ்த்திய பிரதியமைச்சர் மட்டக்களப்பு மாவட்டத்தில் எத்தனையோ கழகங்கள் இருந்தும் இவ்வாறான போட்டிகளை முறக்கொட்டான்சேனை, தேவபுர இளஞர்கள் சிறப்பாக செய்துள்ளமை வரவேற்கத்தக்கது என்று புகழாரம் சூட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது 

ஆரம்ப நாள் நிகழ்வுகள் நடைபெற்று முடிந்தவுடன் 4 அணிகளுக்குமான போட்டிகள் தொடர்ச்சியாக நடைபெற்று இறுதி போட்டியில் விளையாடுவதற்கான தகுதியினை Sound tigers மற்றும் Golden eagles பெற்று அவர்களுக்கான இறுதி போட்டி இன்று நடைபெற்றது,

இந்த போட்டியில் Golden eagles (கோள்ன் ஈகிள்) அணி 2 விக்கட்டுக்களால் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைப் பெற்றுக்கொண்டது.


4 அணிகளுக்கும் அனுசரனையாளர்கள், மேற்பார்வையாளர்கள், பயிற்சிவிப்பாளர்களுடன், கிறிக்கட் கட்டுப்பாட்டு சபை என சர்வதேச விதி முறைகளை ஒத்தாக இந்த Dmcl கிறிக்கட் தொடர் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வெற்றிபெற்ற அணிகளுக்கும் சிறந்த வீரர்களுக்கும் வெற்றிக் கிண்ணங்களும் பணப் பரிசுகளும் வழங்கப்பட்டது.

















No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages