Breaking

Post Top Ad

Sunday, July 15, 2018

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 23 புதிய வீடுகள் கையளிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 பிரதேச செயலகப் பிரிவுகளில் கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்காக 550 வீட்டுத் திட்டங்கள் ஜரோப்பிய ஒன்றிய நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வருகிறன.

இத்திட்டத்தின் கீழ் போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நவகிரி பகுதியில்  நிர்மாணிக்கப்பட்ட புதிய முன்மாதிரி வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (14) நடைபெற்றது.


பிரதேச செயலாளர் செல்வி ஆர்.ராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார், ஜரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி எஸ்.கைமி, கபிடாட் நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.விறவுண், பிரதேச செயலக திட்டமிடல்டப் பணிப்பாளர் எஸ் ரகுநாதன் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 23 வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்க்பபட்டன. 

இப்பிரதேசத்தில் மிகவும் பாதிக்கப்பட்டு வீடு இல்லாதவர்களுக்கு புதிய வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. குறித்த வீடுகள் சுற்றாடலுக்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் இவ்வீட்டினை பெரிதாகக் கட்டிக் கொள்ளக்கூடிய வகையிலும் வீட்டு உரிமையாளரின் விருப்பத்திற்கமைவாகவும் இவ் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. பயனாளிகளுக்கு வாழ்வாதார வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.










No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages