இளைஞர் யுவதிகள் உடற்கட்டமைப்பில் முகங்கொடுக்கும் சவால்களை எதிர்கொள்ளும் முகமாக ஈஸ்டன் பிற்னஸ் ஜிம் எனும் பெயரில் அதி நவீன இயந்திரங்களைக் கொண்டு அமைதியான சுற்றாடலில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்நிலையத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரக்குமார் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் திறந்து வைத்தார்.
கிழக்கு மாகாணத்தில் முதல் முறையாக நவீன உடற்பயிற்சி இயந்திரங்களைக் கொண்டு விசேட பயிற்சியாளர்களினால் இளைஞர் யுவதிகளுக்கான தனித்தனியான பயிற்சிகள் அவர்களின் வசதியான நேரங்களுக்கு ஏற்ப தொழில்சார் துறைசார்ந்த பயிற்சியாளர்களின் ஆலோசனையின் கீழ் நேரக் கணிப்போடு சீரான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவித்தார்.
சமூகத்தில் குற்றச் செயல்களில் இருந்து இளைஞர்கள் ஈடுபடாமல் தடுத்து அவர்களை நேரான சிந்தனையையோடு உயர் சமூக விழுமியங்களை கடைப்பிடித்து முன்மாதிரியான இளைஞர் யுவதிகளாக மாற்றும் நோக்கோடு வியாபார நோக்கமின்றி குறைந்த கட்டணத்தில் பயிற்சிகளை வழங்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாநகர முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கோ.கருணாகரன், இரா துரைரத்தினம், மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவர் எம்.செல்வராஜா, உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்,
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.