Breaking

Post Top Ad

Tuesday, July 24, 2018

செல்லக்கிளியும்-கிட்டுவும் சக்கை வைக்க இடம்தேட… பிரபாகரன் வகுத்த திட்டம்! கறுப்புயூலை தடங்கள்....

யாழ்போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு இளைஞர்களின் உடலங்களில் ஒன்று சீலன் என உளவாளி சேவியர் அடித்து கூறியதும் சரத்முனசிங்க குழப்படைந்தார்.

பிரபாகரனுக்கு அடுத்தநிலையில் கருதப்படும் சீலன் தம்மிடம் இலேசில் அகப்படும் வாய்ப்புகள் இல்லையெனவே சரத்முனசிங்கவும் பிரிகேடியர் பல்தசாரும் நினைத்தனர்.

ஆயினும் தமது உளவாளி சேவியர் இவ்வாறு உறுதியாக கூறுவதால் குழப்பமடைந்த அவர்கள் சீலனின் அன்னையை கொண்டு இந்த குழப்பத்துக்கு முடிவு காண முடிவெடுத்தனர்.

இதன்பின்னர்தான் திருகோணமலையில் வசித்த சீலனின் அன்னை அவசரமாக யாழ்ப்பாணத்துக்கு கொண்டுவரப்பட்டு வைத்தியசாலையின் உடலகளஞ்சிய அறைக்கு அழைத்துசெல்லப்பட்டார்.

அன்னையிடமே புதல்வனின் உடலம் காட்டப்பட்டது. ஈன்றபொழுதில் பெரிதுவந்த தனது மகவு இப்போது 22 வயதான கட்டிளங்காளையின் தோற்றத்தில் சலனமற்றுக்கிடப்பதை அந்த அன்னை காண்கின்றாள்.

சுற்றிநிற்கும் படையினருக்கோ அந்த அன்னையின் உணர்வுப்போராட்டம் குறித்து கிஞ்சித்தும் கவனம் இல்லை. அவள் கூறப்போகும் பதிலுக்காக காத்திருந்தனர்.

சீலனின் அன்னை அழுதார். அது தனது மகனின் உடலம் தான் என உறுதிப்படுத்தினார்.

சரத்முனசிங்காவுக்கு ஆச்சரியமதாங்க முடியவில்லை. குருநகர்படை முகாமில் பெரியவிருந்து ஒன்றை நடத்த தயாராகுமாறு உத்தரவிட்டார்.

சீலன் கொல்லபட்ட செய்தி கொழும்புக்கு பறந்தது. மறுநாள்அரசாங்கத்தின் லேக்கவுஸ் நிறுவன மும்மொழிப்பத்திரிகைகளும் விடுதலைப்புலிகளின் இரண்டாம் நிலைத்தலைவர் கொல்லப்பட்டதாக பெரிய எழுத்தில் தமது தலைப்பு செய்திகளை வெளியிட்டன.

இதற்கிடையே மீசாலையில் சம்பவம் நடத்த இடத்தில் தேடுதலை நடத்திய படைத்தரப்பு விடுதலைப்புலிகளின் சில ஆவணங்களையும் ஓரு சயனைட் குப்பியையும் கைப்பற்றியிருந்தது.

இதுதான் சிறிலங்கா படைத்தரப்பிடம் சிக்கிய முதலாவது

சயனைட்குப்பி. இதன்பின்னர்தான் புலிகளின் சயனைட்குப்பி இப்படித்தான் இருக்கும் என்பதை படைத்தரப்பு அறிந்தது

இதற்கிடையே சீலன் மற்றும் ஆனந்தனின் உடலங்களை தெல்லிப்பளை மயானமொன்றில் பலத்த பாதுகாப்புடன் படையினர் எரியூட்டியிருந்தனர்.

எரியூட்டுவதற்கு முன்னர் சீலன் மற்றும் ஆனந்தனின் உடலங்களை

சரத்முனசிங்க நிழற்படங்களாக எடுத்திருந்தார்.

இந்தப்படங்கள் தான் பின்னர் சரத்முனசிங்கா எழுதிய “எ சோல்யேர்ஸ் வேஷன்” A Soldier’s Version என்ற புத்தகத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தன.

இந்த புத்தகம் வெளியிடப்பட்ட பின்னர் ஒரு விடயத்தை சரத் முனசிங்க சொன்னார். தனது புத்தகத்தை யாரும் வேண்டாவிட்டாலும் பிரபாகரன் ஒரு பிரதியை நிச்சயம் வாங்குவார்.

ஏனெனில் பிரபாகரன் தனது நண்பனான சீலனின் இறுதிக்கட்ட நிழற்படங்களைப்பார்க்கவேனும் தனது புத்தகத்தின் பிரதி தேவைப்படுமென சரத் முனசிங்க கூறியிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் சீலனின் இழப்பு பிரபாகரனுக்கு முதலில் அதிர்ச்சியை வழங்கியது பின்னர் அது வேதனையாக மாறியது இறுதியில் அது சீற்றமாக உருமாறியது.

இதனால் சீலனின் இழப்புக்கு ஒரு பெரியபதிலடித் தாக்குதலை படையினர் மீது தொடுக்க வேண்டுமெனவும் அவர் முடிவெடுத்தார்.

அவரது முடிவு செயலாக மாறுவதற்கு முன்னர் வடக்கில் சீலன் மற்றும் ஆனந்தனுடைய நிழற்படங்களை தாங்கி அவர்களுக்குரிய அஞ்சலி சுவரொட்டிகள் இரவோடு இரவாக பல இடங்களில் பளிச்சிட்டிருந்தன.

விடுதலைப்புலிகளின் இலச்சனையுடன் லெப்டினற்-சீலன் வீரவேங்கை-ஆனந்தன் என பொறிக்கப்பட்டிருந்த இந்த சுவரொட்டிகளை ஆர்வமாக பார்த்த மக்கள் பெடியள் குறித்து குசுகுசுத்தனர்.

தலைவர் பிரபாகரனைப் பொறுத்தவரை புதிய தாக்குதலானது இதுவரை படையினர் சந்திக்காத ஒரு பதிலடியாக இருக்கவேண்டும் என்பதில் உறுதியாகஇருந்தார்.

அதனால் அதற்கான திட்டமிடலை மேற்கொண்டார்.

இதனடிப்படையில் அவரது அறிவுறுத்தலில் செல்லக்கிளியும் கிட்டுவும் சக்கை வைக்க நல்ல ஒரு இடமாகப்பார்க்கப் புறப்பட்டனர். (சக்கை என்ற குறீயீடு வெடிமருந்துக்குரியது.)

அப்போது புலிகளின் கண்ணிவெடித்தாக்குதல் பொறுப்பாளர் என்றால் அது செல்லக்கிளிதான். அதேபோல வெடிமருந்து நிபுணராக இருந்தவர் அப்பைய்யா அண்ணை என அழைக்கப்டும் அப்பைய்யா.

இதற்கிடையே காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இருந்து எஸ்புளோடர் கருவிகள் புலிகளால் எடுத்துச்செல்லபட்டதையடுத்து யாழ்; ராணுவ பொறுப்பாளர் பிரிகேடியர் பல்தாசாரும் கொஞ்சம் உசாரடைந்துவிட்டார்.

இதனால் செல்லக்கிளியின் நடமாட்டங்களை கடுமையாக கண்காணிக்குமாறு யாழ் புலனாய்வு மையத்தையும் அவர் உசார்ப்படுத்தியிருந்தார்.

சீலனின் மரணத்தால் புலிகள் எப்படியும் எங்கோ ஓரிடத்தில் பெரிதாக தாக்குதல் நடத்தக்கூடும்என்பதுபிரிகேடியர் பல்தாசாருக்கும் சரத்முனசிங்கவுக்கும் தெரிந்தது. ஆனால் அது எங்கேயென்றுதான் அவர்களுக்கு தெரியவில்லை. அவ்வாறாக இலேசில் ஊகிக்கும் நிலையை புலிகள் உருவாக்குவதும் இல்லை.

இதற்குள் புலிகள் இவ்வாறு தம்மீது ஒரு தாக்குதலை நடத்த முன்னர் தாம் முந்திக்கொள்ள வேண்டும் என்ற அவசரமும் பிரிகேடியர் பல்தாசாரிடம் இருந்தது.

படைத்தரப்பு இவ்வாறு அவசரப்பட செல்லக்கிளியும் கிட்டுவும் மிக நிதானமாக சக்கை வைப்பதற்குரிய ஒரு நல்ல இடத்தை தெரிவுசெய்தனர். அது யாழ்- பலாலி வீதியில் உள்ள திருநெல்வேலி பகுதி.

செல்லக்கிளியும் கிட்டுவும் இந்த இடத்தை தெரிவு செய்த பின்னர் யூலை 23ம் திகதி அந்தஇடத்தில் கண்ணிவெடித்தாக்குதலை தாக்குதலை நடத்துவது என்ற இறுதி முடிவை பிரபாகரன் எடுத்தார். கண்ணிவெடித்தாக்குதல் என்பதால் புலிகளின் முகாம் பரபரப்பானது.

மறுபுறத்தே புலிகளை தாம் முந்திக்கொள்ள வேண்டும் என்ற அவசரத்தில் பிரிகேடியர் பல்தசாரும் சரத்முனசிங்காவும் தமது தரப்பிலும் ஒரு தாக்குதல் திட்டம்ஒன்றையும் தயாராக்கினர். 1983 யூலை 23ம் ஆந்திகதி! வழமையை விட அன்று அதிகாலையே பிரபாகரன் தூக்கத்திலிருந்து எழுந்துவிட்டார்.

இன்னும் சில மணிநேரங்களில் இலங்கைத்தீவில் பெரும் ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தப்போகும் கணங்களை நோக்கி கடிகார முட்கள் அசைந்து கொண்டிருந்தன.

தடங்கள் தொடரும்......
(நன்றி ஐபிசீ )


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages