Breaking

Post Top Ad

Friday, July 20, 2018

பாரம்பரிய விளையாட்டு நிகழ்வினால் விழாக்கோலமானது விளாவட்டவான்


(விளாவூர் நிருபர்)

கிழக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் மண்முனை மேற்கு பிரதேச செயலக கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்திய பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு இன்று (20. 07. 2018)  பி.ப. 2.31 மணிக்கு விளாவட்டவான் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய முன்றலில் நடைபெற்றது .

இப் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு, மண்முனை மேற்கு பிரதேச கலாசார உத்தியோகத்தர் எம்.சிவானந்தராஜாவின் ஒருங்கிணைப்பின்கீழ் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் சி.சுதாகர் தலைமையில் நடைபெற்றது.
இந்த விளையாட்டு நிகழ்வின் பிரதம அதிதியாக மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர் செ.சண்முகராஜா. சிறப்பு அதிதிகளாக மணமுனை மேறகு பிரதேச செயலக கணக்காளர் வே.வேல்ராஜசேகரம், பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் த.நிர்மலராஜ், கௌரவ அதிதிகளாக மாவட்ட கலாசார இணைப்பாளர்  த.மலர்செல்வன், விளாவட்டவான் விநாயகர் வித்தியாலய அதிபர் கே.ராகவன், விளாவட்டவான் கிராம உத்தியோகத்தர் இ.புஸ்பராஜ், விளாவட்டவான் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், செ.சுசி மற்றும் அழைப்பு அதிதிகளாக விளாவட்டவான் சமுகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் உளளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இடம்பெற்ற விளையாட்டுக்கள்
* வட்டக்காவடி
* சங்கிலிப் பிங்கிலி
* கொத்திருக்கு கொத்து
* தெத்துகௌகோடு
* எவடம் எவடம்
* மொழிக் குண்டு
* சுரக்காய் இழத்தல்
* வார் விளையாட்டு
* பில்லி மட்டை விளையாட்டு
* கட்டைப் பந்து
* கப்பல்கோடு
* கிட்டிப் புல்லு
* சாரக் கிடுகிடு
ஆகிய பாரம்பரிய விளையாட்டுக்கள் இடம்பெற்றன.




























No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages