Breaking

Post Top Ad

Saturday, July 14, 2018

கிழக்கு மாகாண ஆளுநரால் பாடசாலைக்கு காசோலை வழங்கி வைப்பு

மட்டக்களப்பு, மாவட்டத்தின் ஏறாவூர் பகுதியிலுள்ள பாடசாலைகளில் நிலவுகின்ற தளபாட குறைபாடுகளை நிவர்த்திக்குமாறு கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர்  மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவிற்கு கோரிக்கையொன்றினை  விடுத்தார்.

அக்கோரிக்கையை கருத்திற்கொண்ட, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம  நேற்று(13) ஏறாவூர் மாக்கான் மாக்கார் மஹா வித்தியாலயத்தில் நிலவுகின்ற தளபாட குறைபாடுகளை உடனடியாக நிவர்த்திக்குமாறு இரண்டு இலச்சம் ரூபாய் காசோலையினை வழங்கி வைத்தார்.

முன்னாள்  சுகாதார  அமைச்சர் எம்.எஸ்.சுபைர் கருத்து தெரிவிக்கும் போது,

கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற குறைபாடுகளை அதிகளவில்  நிவர்த்தி செய்து வருவதாகவும் மிகுதியான பாடசாலைகளில் நிலவுகின்ற குறையாடுகளை கூடிய விரைவில் நிவர்த்திக்கவுள்ளதாகவும்  அவர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages