Breaking

Post Top Ad

Tuesday, July 17, 2018

திருகோணமலை- மூதூர் பிரதான வீதியில் விபத்து: இருவர் படுகாயம்

திருகோணமலை – பிரதான வீதியில் மூதூர் பிரதேசத்தில் மண் ஏற்றிச்சென்ற டிப்பர் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த லொறி வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து நேற்றைய தினம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக மூதூர் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.


சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்துக்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்துள்ளதாகவும், இருவரும் காயங்களுக்குள்ளாகி மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages