Breaking

Post Top Ad

Monday, July 23, 2018

பாடசாலைகளின் மூடலைத் தடுக்க ஐரோப்பா வாழ் தமிழ் உறவுகளின் ​செயற்பாடு

மூடப்படும் நிலையில் உள்ள பாடசாலைகளின் வளர்ச்சியை நோக்காகக் கொண்டு புலம்பெயர் ஐரோப்பா வாழ் தமிழ் சமூகத்தின் ஆதரவுச்செயற்பாட்டின் மற்றொரு செயற்பாடு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் நடைபெற்றது.

குறித்த பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நரிப்புல்த்தோட்டம், மகிழவட்டவான் கிராமங்களில் 2வது குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுத்த  தாய்மார்களுக்கு தலா ரூபா 10,000 நான்கு குடுப்பங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.


இந் நிகழ்வில், பிரதம அதிதியாக ஓய்வுபெற்ற மண்முனை மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன் கௌரவ அதிதிகளாக  பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திகுமார், உதவிக்கல்விப் பணிப்பாளர் .க.ஹரிகரராஜ் வலயக் ஆகியோர் கலந்து கொண்டு உதவிகளை வழங்கி வைத்தனர்.

சமூக ஆர்வலர்கள் கிராம அபிவித்திச் சங்கத் தலைவர்கள் எனப் பலரும் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

புலம்பெயர் ஐரோப்பா வாழ் தமிழ் மக்கள் ஆதவில் கிராம அபிவிருத்தி என்ற  தலைப்பில் மண்முனை மேற்கு பிதேச செயலகப் பிரிவில் உள்ள நரிப்புல்த்தோட்டம், மகிழவட்டவான் நெல்லூர், விழாவட்டவான் மற்றும் மணிபுரம் ஆகிய கிராம அபிவிருத்திச் சங்கங்கங்களினூடாக, மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் மூடப்படும் நிலையில் உள்ள பாடசாலையின் நிலைமை கருதி பிரதேச தமிழ் மக்களின் பிறப்பு வீதத்தை அதிகரிக்கும்  நோக்கில் இச்செயற்பாடு கடந்த இரண்டு வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

முதல் கட்டமாக நரிப்புல்லுத்தோட்டம், மகிழவட்டவான் கிராமங்களில் 2016ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சிறுவர் தினத்தை முன்னிட்டு 2வது குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுத்த  தாய்மார்களுக்கு தலா ரூபா 10இ000 ம் பிள்ளை பராமரிப்பிற்காக 18 வயது வரை மாதம் தோறும் தலா ரூபா 1000ம் வழங்கி வைக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டம் இரண்டு வருடங்களைக் கடந்த நிலையில் பல பாராட்டுதல்களையும், அதிகப்படியான ஆதரவையும் பெற்றுவந்துள்ளமையால் இன்னும் வலுவூட்டப்பட்ட நிலைமையில்  நரிப்புல்த்தோட்டம், மகிழவட்டவான் கிராமங்களில் மேலும் 2வது குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுத்த  தாய்மார்களுக்கு தலா ரூபா 10இ000ம் நான்கு குடுப்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இத்திட்டத்தில் 51 குடும்பங்கள் உள்வாங்கப்பட்டதையும் இத்திட்டம் வெற்றியளித்து வருவதையும் பங்கேற்கின்ற புலம்பெயர்வாழ் தமிழ் சமூகத்திற்கு தாபகர் சுவீஸ் வாழ் செ.அமிர்தலிங்கம் நன்றிச் செய்தியையும் தெரிவித்தார்.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக ஓய்வுபெற்ற மண்முனை மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன் கலந்துகொண்டு கூறுகையில் இவ் வலயத்தில்  தரம் 01க்கான மாணவர்கள் அனுமதி இல்லாத நிலைமையில் இவ்வருடம் இரண்டு பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக வருத்தம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மேற்கு வலய கல்வி அபிவிருத்திக்கு இத்திட்டம் மேலும் வலுவூட்டுவதாகவும் மேலும் பல கிராமங்களை இத்திட்டத்தினுள் இணைத்துக்கொள்ளுமாறும் வலயக் கல்வி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர் .





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages