கிரிஎல்ல பிரதேசத்தில் வங்கி ஒன்றை கொள்ளையிட முயன்றமை தொடர்பில் இச்சந்தேகநபர் கடந்த 3 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
அதன்பின்னர், கைவிரல் அடையாளங்களை பதிவு செய்துகொள்வதற்காக சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்து செல்லப்பட்டபோது, இவ்வாறு தப்பிச்சென்று குப்பை கூளத்தினுள் விழுந்துள்ளார்.
அதன்போது, அவர் மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, 'கடவுள் எனது கனவில் தோன்றி, நீதிமன்றை உடைக்குமாறு கட்டளையிட்டார். நானும் அதனை செய்தேன். பின்னர் வங்கியை கொள்ளையிடுமாறு கடவுள் கூறினார். அதனையும் செய்தேன். இன்று என்னை நீதிமன்றிலிருந்து தப்பிச்செல்லுமாறு அவரே கட்டளையிட்டார்" எனக் கூறினார்.
அதன்பின்னர், இவர் கிரிஎல்ல பிரதேசத்திலுள்ள வங்கி ஒன்றை கொள்ளையிடச் சென்றபோது, பிரதேசவாசிகளால் மடக்கிப்பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இரத்தினபுரி, தம்புலுவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதான நபரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளவராவார்.
இதனையடுத்து, அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, நீதிமன்ற திருட்டு தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளுமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.