
கடந்த சனிக்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமான சடங்கு உற்சவமானது வியாழக்கிழமை பால்குட பவனி இடம்பெற்றதுடன், வெள்ளிக்கிழமை தீ மிதிப்பு உற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளது.
இப்பால்குட பவனியானது புச்சாக்கேணி செந்தூர் முருகன் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி கதிரவெளி வைத்தியசாலை பிள்ளையார் ஆலயம், பத்தினி அம்மன் ஆலயம், வீரகத்தி விநாயகர் ஆலயம் ஊடாக கதிரவெளி திருகோணமலை பிரதான வீதி வழியாக ஆலயத்தை சென்றடைந்தது.
இதன்போது ஆலயத்தில் அம்பாளுக்கு அபிஸேகப் பூசை, பால் அபிஷேகப் பூசை மற்றும் சடங்கு உற்சவ பூசைகள் இடம்பெற்றதுடன், இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தங்களுடைய நேர்த்தியை நிறைவேற்றிக் கொண்டனர்.
இவ்சடங்கு கால பூசைகள் யாவும் ஆலய பிரதம குருவும், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் மற்றும் ஆலய குரு ம.சரத்பாபு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.