Breaking

Post Top Ad

Wednesday, July 18, 2018

கூட்டுறவில் நல்லாட்சியும் அபிவிருத்தியும் தொடர்பான செயலமர்வு


(k.pllai)
இலங்கை தேசிய கூட்டுறவு சபையின் ஏற்பாட்டில் 'வீ எபெக்ட்' நிறுவனத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு சம்மேள பிரதிநிதிகளுக்கு கூட்டுறவு அபிவிருத்தி தொடர்பான செயலமர்வு  மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள 14 கூட்டுறவு சங்கங்களை உள்ளடக்கிய பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.


இச் செயலமர்வில் கூட்டுறவு நல்லாட்சி, கூட்டுறவு அபிவிருத்தி, கூட்டுறவு தேவைகள் இனங்காணல் ஆகிய மூன்று விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது.


மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் அபிவிருத்தியை நகரங்களிலும் கிராமங்களிலும் சிறந்த திட்டமாக கட்டியெழுப்பும் நோக்குடன் வீ எபெக்ட் நிறுவனத்தினர் 2018ஆம் ஆண்டு தொடக்கம் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டுவரை 5ஆண்டு திட்டமாக உதவியளிக்கவுள்ளது.


இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு சம்மேளன தலைவர் என்.உருத்திரமூர்த்தி, வீ எபெக்ட் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் குமார பொத்துவில, கூட்டுறவு சபை பரிசோதகர் கே.மகேஸ்வரன், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.காந்தரூபன், மாவட்ட உபதலைவர்களான வர்சை முஹமட், எஸ்.விஜயகுமார், மாவட்ட கூட்டுறவு செயலாளர் திருமதி.த.அனுசகுமார் மற்றும் மாவட்ட சங்கப் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.












No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages