Breaking

Post Top Ad

Thursday, July 26, 2018

ஏறாவூர் செங்கலடி மின் பாவனையாளர் பிரிவில் அடிக்கடி ஏற்படும் மின் தடையால் அதிக சிரமம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் - செங்கலடி மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட பிரதேசங்களில் அடிக்கடி ஏற்படும் மின் தடையால் அனைவரும் அன்றாட அலுவல்களில் அதிக சிரமத்தை எதிர்நோக்குவதாக மின் பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முன்னறிவித்தல் ஏதுமின்றி அடிக்கடியும், சிலவேளை குறுகிய நேரமாகவும் சிலபோது ஒரு மணி நேரத்திற்குக் குறைவாகவும் அல்லது கூடுதலாகவும் இந்த மின் தடை ஏற்படுத்தப்படுவதாக மின் பாவனையாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.


கடந்த சில வாரங்களாக இரவு, பகல் பாராது திடீரென மின் தடைப்படுத்தப்படுகின்றது.

தற்போது கடும் அனல் வெப்பக் காற்றுடன் புழுக்கமாகவும் இருப்பதால் மின் சாரமும் தடைப்படும்பொழுது மின் பாவனையாளர்கள் இன்னமும் அதிக அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

இந்த திடீர் மின் தடை குறித்து ஏறாவூர் செங்கலடி மின் பாவனையாளர் சேவை நிலையத்துடன் தொடர்பு கொண்டு கேட்டால் வழமையான திருத்த வேலைகள், அல்லது மின் அழுத்தங்கள் கூடிக்குறையும்போது ஏற்படும் நிகழ்வுகள் என பதிலளிக்கப்படுகின்றது.

இதேவேளை, கடந்த பல மாதங்களாக ஏறாவூர் செங்கலடி மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட பிரதேசங்களிலபிரதி வயாழக்கிழமை தோறும் மின் விநியோக விஸ்தரிப்பு வேலைக்காக மின்சாரம் தடைப்படுத்தப்படுகின்றது.

அதற்கும் மேலதிகமாகவே தற்போது தினமும் திடீர், திடீரென மின்விநியோகம் தடைப்படத்தப்படுவதால் அதிக அசௌகரியங்களை மின் பாவனையாளர்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.

இதன் காரணமாக பல மின்னியல் சாதனங்களும் பழுதடைந்து விடுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

புதன்கிழமை  25.07.2018 முழுநாளும் பல தடவைகளுக்கு மேல் மின்சாரம் ஏறாவூரில் திடீர் திடீரெனத் தடைப்படுத்தப்பட்டது மின்பாவனையாளர்களை எரிச்சலூட்டியதாக ஏறாவூர் செங்கலடி மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்கு எதிராக முகநூல்களில் காரசாரமான கருத்துக்கள் தெரவிக்கப்பட்டிருந்தன.





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages