அம்பாறை அக்கரைப்பற்று – ஆலையடிவேம்பு பகுதியிலுள்ள மாணவர்கள் சிலர் உட்கொண்ட இனிப்புப் பண்டம் விசமாகியுள்ளது.
இதன்போது, சுகயீனமுற்ற 7 மாணவர்கள் அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
5 மாணவர்களும் 2 மாணவிகளும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆலையடிவேம்பு பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் தரம் 7 இல் கல்வி கற்கும் மாணவர் ஒருவரின் பிறந்தநாளை முன்னிட்டு இனிப்புப் பண்டம் வழங்கப்பட்டுள்ளது.
அவற்றை உட்கொண்ட சில மாணவர்கள் வாந்தி, வயிறுவலி போன்ற குணங்குறிகளுடன் சுகயீனமடைந்துள்ளனர்.
அவர்கள் உட்கொண்ட இனிப்புப் பண்டம் காலாவதியாகியுள்ளமை பின்னர் கண்டறியப்பட்டுள்ளது.
Post Top Ad
Tuesday, July 3, 2018
ஆலையடிவேம்பு மாணவர்கள் உட்கொண்ட இனிப்புப் பண்டம் விசமாகியது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.