இன்றைய தினம் 03.07.2018 மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொள்ளும் உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அவர்களிடம் புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலையால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த கோவை ஒன்றை பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்கள் கையளித்துள்ளார்.
குறித்த கோவையில் தண்ணீர் தொழிற்சாலையால் பொது மக்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் ஏற்பட இருக்கும் ஆபத்து குறித்தும் அதற்காக முறைகேடாக பெறப்பட்ட அனுமதிகள் குறித்தும் தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும்
அவற்றை இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் கையளித்து ஜனாதிபதியுடன் பேசி முடிவெடுப்பதாக உயர் கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அவர்கள் தன்னிடம் உறுதியளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனிடம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.