காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் வவுனியாவில் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர், அவர்கள் இன்று திங்கட்கிழமை யாழ். நல்லூர் ஆலயத்திற்கு வழிபாடுகளில் ஈடுபட சென்ற போது தமிழ் தாய்மார்களை ஆலய நிர்வாகத்தினர் ஆலயத்திற்குள் செல்ல விடாது தடுத்துள்ளனர்.
இதனால், ஆலய நிர்வாகத்தினருக்கும், பெண்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
'இராணுவம் வரலாம், போலீசார் வரலாம், வெள்ளைக்காரன் வரலாம், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மட்டும் தமது வேண்டுதல்களுக்காக வரக்கூடாதா? இது என்ன நியாயம்? ஐ.நாவும், சிறிலங்கா அரசாங்கமும் எமக்கான நியாயத்தின் கதவுகளை இறுகப்பூட்டிவிட்டுள்ளன இவையெல்லாம் நியாயமா?' என்று கேட்கின்றார்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்.
இதன்போது, வெளிநாட்டவர்களும் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளனர். இந்த நிலையில் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு தமிழ் தாய்மார்கள் புறக்கணிக்கப்பட்ட சம்பவம் தமிழர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, தமிழ் மண்ணில் நாங்கள் பலவற்றை இழந்து விட்டோம் என்றும் தமிழர்களுக்கு இந்த உரிமை கூட இல்லையா எனவும் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் கேள்வி எழுப்பியுள்ளர்.
நல்லூர் கந்தசுவாமி கோயில் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற இந்துக் கோயிலாகும்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.