அந்த மகஜரில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்ததைத் தொடந்து, கிழக்கு மாகாணத்தில் அரசியல் பழிவாங்கள் ரீதியான இடமாற்றங்கள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அரச உத்தியோகத்தர்களின் ஆரம்பமட்ட மற்றும் இடைநிலைமட்ட உத்தியோகத்தர்கள் முறையற்றதும் அரசியல் பழிவாங்கலுள்ளாகும் வகையிலும் இடமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது அரசாங்க உத்தியோகத்தர்களின் அடிப்படை உரிமை மற்றும் சிறப்புரிமை மீறும் செயல் என்றும் பொத்துவில் பிரதேச சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சாரதி, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் நிதியுதவியாளர், செயலாளர் ஆகியோர் இவ்வாறான இடமாற்றங்களை பெற்றுள்ளதுடன், மேலும் பலர் இவ்வாறான இடமாற்றத்துக்குள்ளாகலாம் என்ற அச்சத்துடனும், மன உளைச்சலுடனும் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, உடனடியாக இவ்வாறான இடமாற்றங்கள் நிறுத்தப்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ள அனைத்து முகாமைத்துவ உதவியாளர்கள் தொழில் சங்கம், இவ்வாறு இடமாற்றங்களை ஏற்கெனவே பெற்றுக்கொண்டவர்கள் மீண்டும் நியமிக்க ஏற்பாடு செய்தல் வேண்டுமென்றும் அம்மகஜரில் கோரியுள்ளது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.