Breaking

Post Top Ad

Wednesday, July 25, 2018

காட்டு யானை தாக்கி மாடு வளரப்பாளர் மரணம்

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பாலாமடு எனுமிடத்தில் மாட்டுப்பட்டியடிக்குச் சென்று கொண்டிருந்த மாடு வளர்ப்பாளரை காட்டு யானை தாக்கியதில் அவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டு விட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புதன்கிழமை 25.07.2018 பொழுது புலரும்போது இடம்பெற்ற இச்சம்பவத்தில் வந்தாறுமூலை சங்கர் மில் வீதியை அண்டி வசிக்கும் விஸ்வலிங்கம் ஏரம்பமூர்த்தி (வயது 55) எனும் குடும்பஸ்தரே பலியாகியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக ஸ்தலத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை உடற்கூறாய்வுக்காக  செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு வரவுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages