கல்முனையில் இருந்து உகந்தை மலை முருகன் ஆலயம் மற்றும் கதிர்காமம் முருகன் ஆலயம் ஆகியவற்றுக்கு விசேபோக்குவரத்து பஸ் சேவை இடம்பெற்றுவருவதாக கல்முனை சாலை முகாமையாளர் ஏ.எம்.ஜௌபர் தெரிவித்தார்.
கடந்த முதலாம் திகதி தொடக்கம் கல்முனையில் இருந்து உகந்தை மலை முருகன் ஆலயத்திற்கான விசேபோக்குவரத்து பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 6 மணிக்கு உகந்தை நோக்கிய பஸ்சேவை இடம்பெற்றுவருகின்றது. கல்முனையில் இருந்து உகந்தைக்கு சாதாரணமாக 315 ரூபா கட்டணம் அறவிடப்படுகின்றது. தற்போது மூன்று பஸ்கள் சேவையில் ஈடுபட்டுள்ளன. பக்தர்களின் வருகை மற்றும் நலன்கருதி விசேடபஸ் போக்குவரத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்படும்.
இதேவேளை கதிர்காமத்திற்கான பஸ்சேவை எதிர்வரும் 10 ஆம் திகதியில் இருந்து ஆரம்பமாகும் எனவும் பயணிகள் முன்கூட்டியே தமது ஆசனப்பதிவுகளையும் மேற்கொள்ளலாம் என ஆசனப்பதிவாளர் என்.உமாகரன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.