Breaking

Post Top Ad

Monday, July 2, 2018

காதல் விவகாரத்தால் பாட்டியை ‍கொலைசெய்து பொதிசெய்து வீசிய மாணவியும் காதலனும்

காதல் உற­வினை அறிந்து கொண்ட பாட்­டியை கொன்று பொதி­செய்து  கலஹா பொலிஸ் பிரி­விற்குட்பட்ட  காட்டுப் பிர­தே­சத்தில்  வீசி எறிந்த உயர்­தர வகுப்பு  மாண­வி­யையும் அவரின் காத­ல­னையும் கட்­டு­கஸ்­தோட்டை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

கைது செய்­யப்­பட்­ட­வர்­களை கண்டி மாவட்ட  நீதிவான் முன்னிலையில் ஆஜர்­ப­டுத்­தி­ய­போது குறித்த இரு­வ­ரையும்  எதிர்­வரும் 10 ஆம் திகதிவரை விளக்க மறி­யலில் வைக்­கு­மாறு நீதிவான் உத்­த­ர­விட்டார்.


இதன்­போது கட்­டு­கஸ்­தோட்டை கஹால்ல பிர­தே­சத்தைச் சேர்ந்த 67 வய­து­டைய மூன்று பிள்­ளை­களின் தாயான குமாரி சென­வி­ரட்ண என்ற வயோ­திபப் பெண்ணே பேத்­தியின் காத­லனால்  கொலை செய்­யப்­பட்­ட­வ­ராவார்.

இச்­சம்­பவம் குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

பெற்றோர் பொலன்­ன­று­வையில் வசித்து வந்த நிலையில் பாட்­டியின் தனிமை கருதி அவ­ருடன் தங்கி  கட்­டு­கஸ்­தோட்­டை ­பி­ர­தேச பாட­சாலை ஒன்றில் உயர்தரம் கற்று வந்த  சந்­தேக நப­ரான மாணவி சம்­பவ தின­மான கடந்த 24 ஆம் திக­தி ­அம்­பிட்­டியைச் சேர்ந்த உயர் தரத்தில் கற்று வந்த மாண­வ­னான  தனது  காத­லனை இரவு இர­க­சி­ய­மாக வீட்­டுக்கு வர­வ­ழைத்து தனது அறையில் தங்க வைத்­து அதி­காலை வெளியில்  அனுப்­பிய சமயம் பாட்­டி­ அதனை கண்­டுள்ளார்.

இத­னை­ய­டுத்து பேத்­தி­யையும் குறித்த இளை­ஞ­னையும் கடு­மை­யான தொனியில் ஏசி சத்­த­மிட்­டுள்­ளதாக தெரி­ய­வ­ரு­கி­றது.

இச்­சந்­தர்ப்­பத்தில் தமது இர­க­சிய காதல் உறவு பாட்­டிக்கு தெரிய வந்­ததால் அதிர்ச்­சிக்­குள்­ளான இரு­வரும் பாட்­டியை கட்டுப் படுத்­து­வ­தற்கு வேறு வழி தெரி­யாது திகைத்து நின்றுள்ளனர். இதன்போது காத­ல­னான குறித்த இளைஞர் வீட்டுக் கத­விற்கு பாது­காப்­பாக போடப்­பட்­டி­ருந்த பொல் ஒன்றை எடுத்து பாட்­டியின் தலையில் பல­மாக தாக்­கி­யுள்ளார். இதில் அவர் ஸ்தலத்­தி­லேயே துடி­து­டித்து உயி­ரி­ழந்­து­விட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

பின்னர் அவரின் சட­லத்தை பை ஒன்றில் சுற்றி கட்­டி­லுக்கு அடியில் போட்­டு­விட்டு இரு­வ­ரு­மாக இணைந்து வீட்டை கழுவி  தட­யங்­களை அழித்­துள்­ளனர்.

மறுநாள் 25 ஆம் திகதி இரு­வ­ரு­மாக சேர்ந்து கண்டி நக­ருக்குச் சென்­றுள்­ளனர். அங்கு மாலை­வரை சுற்­றித்­தி­ரிந்து,  சட­லத்தை வீசி எறி­வ­தற்­கான இடத்தை தேடி­யுள்­ள­தோடு அன்று மாலை கார் ஒன்றை வாட­கைக்கு பெற்று சந்­தேக நப­ரான மாண­வனே காரை செலுத்தி வந்­துள்­ள­தோடு இடையில் அதன் இலக்க தக­டு­களை கழற்றி எடுத்து கொண்டு வீட்­டுக்குச் சென்­றுள்­ளனர்.

பின்னர் தாம் கடையில் வாங்கி வந்த கறுப்பு நிற பொலித்தீன் பைகளில் சட­லத்தை போட்டு பிளாஸ்­ட­ரினால் நன்­றாக ஒட்டி பொதி செய்து இரவு ஒரு மணி­ய­ளவில் காரில் எடுத்துச் சென்று கலஹா பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட கிதுள்­முல்ல தோட்­டப்­ப­குதி பற்­றைக்­காட்­டுக்குள் வீசி எறிந்து விட்டு வரும் வழியில் கொலை­யுண்ட பெண்ணின் உடை­களை கண்டி நகரில் உள்ள சாக்­க­டைக்குள் போட்­டுள்­ளனர். இதன்பின்  காத­லனை வழி­ய­னுப்பிவிட்டு  மறுநாள் 26 ஆம் திகதி காலை பாட்­டியை காண­வில்லை என உற­வி­னர்­க­ளுக்கு தொலை­பே­சி மூலம் மாணவி அறி­வித்­துள்ளார்.

அன்­றை­ய­ தினம் உயி­ரி­ழந்த பெண்ணின் மக­ளினால் தனது தாய் காணாமல் போயுள்­ள­தாக கட்­டு­கஸ்­தோட்டை பொலிஸ் நிலை­யத்தில் செய்­யப்­பட்ட முறைப்­பாட்­டுக்­க­மைய பல்­வேறு கோணங்­களில்  விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வந்த பொலிஸார் குறித்த மாண­வி­யிடம் மேற்­கொண்ட தீவிர விசா­ர­ணை­களின் பொழுதே மேற்­கூ­றிய விடயங்களை அவர் வாக்குமூலமாக வழங்கியுள்ளார். சடலம் வீசப்பட்ட இடத்தையும் அடையாளம் காட்டியுள்ளார்.

 இதையடுத்தே குறித்த மாணவியும் அவரின் காதலனும் கைது செய்யப்பட்டு நீதிவான் முன்னிலையில்ஆஜர் செய்யப்பட்டனர். இதனையடுத்து இருவரையும் விளக்கமறியலில் வை க்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages