Breaking

Post Top Ad

Monday, July 23, 2018

நீதிபதி இளஞ்செழியன் செய்த செயல்! பிரமிப்பில் உறைந்துபோன மக்கள்

(கே.ஜெயசீலன்)
திருகோணமலை நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உயிரிழந்த மெய்ப்பாதுகாப்பாளர் சரத் ஹேமசந்திரவிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
கடந்த வருடம் இதுபோன்றதொரு நாளில்(ஜூலை 22) யாழில் வைத்து நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தபட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூடு சம்பவம் பதிவாகியுள்ளது.



யாழில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்த இந்த சம்பவத்தில் நீதிபதி இளஞ்செழியன் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டனர்.

எனினும் நீதிபதி இளஞ்செழியனின் உயிரை பாதுகாக்க போராடிய இரு பாதுகாவலர்களில் சரத் ஹேமச்சந்திர உயிரிழந்தார்.

இந்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்று ஒருவருடம் ஆகியுள்ளதால் இன்று சரத் ஹேம்ச்சந்திர இல்லத்திற்கு சென்று நீதிபதி இளஞ்செழியன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.அவரது இந்த செயலை பார்த்து மக்கள் பிரமிப்பில் உறைந்து போயுள்ளனர்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages