
மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் வேலுப்பிள்ளை தவராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம், மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,கௌரவ மாநகர சபை உறுப்பினர் து.மதன் ஆகியோர் மக்களின் தேவைகளை செவிமடுத்தனர்.வீட்டுத்தேவை,தொழிற்தேவை,மலசலகூடத்தேவை, போக்குவரத்துதேவை,நூலகத்தேவை,சமூர்த்திதேவைகள்,வீதிப்புணரமைப்பு போன்ற தேவைகளை மக்கள் முன்வைத்தனர்.
இவைகளை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கேட்டுக்கொண்டனர்.
குறித்த தேவைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகளை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், மேயர்,பிரதிமேயர்,மாநகரசபை உறுப்பினர்கள் ஆகியோர் எடுத்துரைத்தனர்.
இவ்வேலை கம்பெரலிய நிகழ்ச்சித்திட்டம்,என்ரபிரைஸ் ஸ்ரீலங்கா பற்றியும் அதன் மூலமான உதவிகள் பற்றியும் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் விளக்கமளித்தார்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.