திருகோணமலை - புல்மோட்டை பகுதியில் புதையல் தோண்டிய மூவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமீலா குமாரி ரத்நாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போதே சந்தேகநபர்களை எதிர்வரும் முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் நிக்கவரட்டி, பதவிய, ஸ்ரீபுர மற்றும் கந்தளாய் பேரமடுவ பகுதியை சேர்ந்த 54, 57 மற்றும் 34 வயதுடையவர்களே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் புல்மோட்டை யான்ஓயா பகுதியில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த வேளையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை சந்தேகநபர்களிமிருந்து மண்வெட்டி நான்கு, கோடரி இரண்டு, கூடைகள், இரும்புக் கம்பிகள் மற்றும் பூஜைப் பொருட்கள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
Post Top Ad
Tuesday, July 24, 2018
பூஜை பொருட்களுடன் மூவர் செய்த காரியம்: வழங்கப்பட்டுள்ள உத்தரவு
Tags
Trincomalle#
Share This
About vettimurasu
Trincomalle
Tags:
Trincomalle
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.