Breaking

Post Top Ad

Tuesday, July 17, 2018

மட்டக்களப்பில் கலைக் கிராமத் தொகுதியை நிர்மாணிக்கும் நிகழ்ச்சித் திட்டம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கலைக் கிராமத் தொகுதி 25 இனை நிர்மாணிக்கும் நிகழ்ச்சி திட்டம் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வீடமைப்பு நிர்மாண அமைச்சு, உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன் இக்கலைக் கிராமத் தொகுதி நிர்மாணிக்கப்படவுள்ளது.


வறிய நிலையிலுள்ள பல்துறை சார்ந்த கலைஞர்கள் இவ்வீட்டுத் தொகுதியினூடாக நன்மையடைவதோடு நாட்டின் கலைத்துறையினூடான அர்ப்பணிப்பை தொடர்ந்து மேற்கொள்ளவும் இந்த நலனோம்பு வசதி வாய்ப்பளிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இலைமறை காய்போல் கண்டு கொள்ளப்படாதிருக்கும் கலைஞர்கள் இந்த நலனோம்பு வசதிகளினூடாக நன்மையடைவது மங்கி மறைந்து கொண்டிருக்கும் நாட்டின் கலைத்துறையை உயிர்ப்பிக்கவும் சமாதான சௌஜன்ய சகவாழ்வும் பெருந்துணை புரியும் என இவ்வீட்டுத் திட்ட முன்னெடுப்புக்கள் தொடர்பாக கலைஞர்கள் கருத்து வெளியிட்டனர்.



எழுத்துத் துறை, புத்தாக்கம், நாடகம், ஆடல், பாடல், நாட்டியம், கூத்து. கை வினைப்பாடுகள், நாட்டுப்புற, கிராமத்துக் கலைகள் மற்றும் இன்னபிற பாரம்பரியக் கலைகளில் தங்களை அர்ப்பணித்துள்ளோர் இந்த நாட்டின் பாரம்பரியத்தைக் கட்டிக் காத்து உயிரூட்டி சமாதான சகவாழ்வுக்கு உறுதுணை புரிந்துள்ளார்கள் என்பதால் இந்த உன்னத முயற்சி தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கலைஞர்கள் என்ற அடிப்படையில் கலைகளில் மிளிரும் மாற்றுத் திறனாளிகளும் உட்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும்  தெரிவித்தனர்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages