Breaking

Post Top Ad

Wednesday, July 25, 2018

பொலிஸ் விசாரணையில் விஜயகலா மகேஸ்வரன் கூறியது இதுதான்? வெளியானது தகவல்

விடுதலைப் புலிகள் தொடர்பில் தான் வெளிட்ட கருத்தின் பாரதூர தன்மையை, நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண நிலையை அடுத்தே விளங்கிக் கொண்டுள்ளேன் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம், திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் பொலிஸார் நேற்று மூன்று மணி நேரம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கும் குறித்து விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்றைய தினம் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியிருந்த விஜயகலா மகேஸ்வரன், “தான் ஐக்கிய தேசியக் கட்சியை ஊக்குவிக்கவே இந்த கருத்தைத் தெரிவித்தேன்.

விடுதலைப் புலிகளை மீள உருவாக்குவது எனது நோக்கம் அல்ல.
தான் வெளிட்ட கருத்தின் பாரதூர தன்மை குறித்து, நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண நிலையை அடுத்தே விளங்கிக் கொள்ள முடிந்துள்ளதென” அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages