வெளிநாட்டில் பணிக்காக சென்று நாடு திரும்பிய மனைவியை, கணவர் நடுவீதியில் வைத்து வெட்டி கொலை செய்துள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏ9 வீதியின் கைலபத்தான சந்தியில் நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான எம்.ஜீ.தம்மிக்கா குணதிலக்க என்ற 35 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குடும்ப பிரச்சினை காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மனைவி வெளிநாட்டில் இருந்த போது அசிட் தாக்குதல் மேற்கொண்டு கொலை செய்வதாக கணவர் தொலைபேசியில் அச்சுறுத்தியுள்ளார் என தெரியவந்துள்ளது.
கணவர் தொடர்ந்து இவ்வாறு அச்சறுத்தும் நிலையில், பயத்துடன் இலங்கை வந்த பெண் கடந்த 8ஆம் திகதி கெக்கராவ, சுதர்ஷகமவில் உள்ள சகோதரனின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் நேற்று சகோதரனின் பிள்ளைக்கு சிகிச்சை பெறுவதற்காக கெக்கிராவ வைத்தியசாலைக்கு பேருந்தில் சென்று கைலபத்தான சந்தியில் முச்சக்கரவண்டியில் ஏற முயற்சித்த பெண்ணை கீழே தள்ளிய கணவன் கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் படுகொலை காரணமாக உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிய வருகிறது.
Post Top Ad
Thursday, July 12, 2018
Home
Sri lanka
வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் - அதிர்ச்சியில் குடும்பத்தினர்
வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் - அதிர்ச்சியில் குடும்பத்தினர்
Tags
Sri lanka#
Share This
About vettimurasu
Sri lanka
Tags:
Sri lanka
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.