
“வீரத்தின் வித்தான வீரமாகாளி வங்கக்கடல்தாவி
ஈழத்தமிழ் ஆரைநகர் தாமரைப் பொய்கைமேவி
ஆலோடுரசு கொன்றைவம்மி நிழல்தம்தரு சூழலிலே
நேராக கோயிலமர்ந்து தாடிமாதப் பூரணையிலே
தாயே நீ வந்து தீ மிதிப்பாய் பக்தர்கள் புடைசூழ
பூரணைப் பூசைதோறும் பூப்போட்டு வணங்கிவர
காரணியே கருணையோ ஆருளோடாசி அளித்து
வேளைதோறும் காத்திட வித்தகியே வந்திடம்மா”
தாமரைப்பொய்கை மலர்மெட்டுக்கள் மகிழ்ந்து சதிராட முழுமதித்தாயாக பொலிவுற்றுப் பூரிப்போடு பக்தர்களுக்கு நித்திய அருளளித்து காத்திருக்கும் சூலி. திரிசூலியான வீரமாகாளித்தாயரின் விளம்பி வருட சடங்கு உற்சவம் ஆடித்திங்கள் 5 ஆம் நாள் (21.07.2018 – சனிக்கிழமை) அன்று இரவு 7.00 க்கு திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி ஆடித்திங்கள் 9 ஆம் நாள் (25.07.2018 – புதன் கிழமை) அன்று பிற்பகல் 5.00 அளவில் பெருமைமிகு கண்ணகை அம்பாள் கோயிலில்
இருந்து மடைப்பெட்டி எடுத்தலும்.
ஆடித்திங்கள் 10 ஆம் நாள் (25.07.2018 – வியாழக்கிழமை) அன்று பிற்பகல் வீரகம்பம் வெட்டுதலும் அதனை தொடர்ந்து விசேட கிரிகைகள் இடம்பெற்று அக்கினி வளர்த்தல் இடம்பெறும். ஆடித்திங்கள் 11 ஆம் நாள் (26.07.2018 – வெள்ளிக்கிழமை) அன்று அதிகாலை தீமிதிப்புடன் நிறைவு பெறும்.
திரு.கோ.பதமசீலன் அவர்கள் பிரதம பூசகராகவும் திரு.கோ.கயசீலன் அவர்கள் உதவி பூசகரகாகவும் கடமையாற்றி அம்பாளின் சடங்கினை நடாத்துவதற்கு அருன்கூடியுள்ளது
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.