ஏறாவூர் அல் முனீரா பாலிகா மகா வித்தியாலயத்தில் எதிர்வரும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களும் இந்த இலவச இருதய சிகிச்சை முகாம் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சனிக்கிழமை 14.07.2018 ஆரம்பமாகவிருக்கும் இந்த இலவச இருதய சிகிச்சை முகாம் அன்றைய தினம் காலை 6.00 மணியிலிருந்து முற்பகல் 11.00 மணிவரையும் இடம்பெறுவதோடு மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும் காலை 6.00 மணியிலிருந்து நண்பகல் 12 மணிவரையும் நடைபெற ஏற்ற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த சிகிச்சை முகாமில் பங்குபற்றி பயனடைந்து கொள்ள விரும்புவோர் நேரகாலத்துடன் வருகை தந்து தங்களைப் பரிசோதித்துக் கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் பொதுமக்களைக் கேட்டுள்ளனர்.
தங்களைப் பரிசோதிக்க வரும் பொதுமக்கள் குறைந்தபட்சம் 12 மணித்தியாலம் உணவைத் தவிர்த்துக் கொண்டு வந்து இருதய சிகிச்சையில் பங்கேற்பது சிறந்தது என எதிர்பார்க்கப்டுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமதின் நிதி அனுசரணையில் இடம்பெறும் இந்த இலவச இருதய சிகிச்சை முகாமில் இருதய சத்திரசிகிச்சை சிறப்பு நிபுணர்கள் கலந்து கொண்டு பொதுமக்களைப் பரிசோதிக்க உள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இருநாள் இருதய சிகிச்சை முகாமில் பங்குபற்றி வறிய குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்படும் 20 இருதய நோயாளிகள் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் இலவச சிகிச்சைக்குத் தகுதி பெறுவர் என்றும் நசீர் ஹாபீஸ் பவுண்டேசன் அமைப்பு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.