ஐந்து நாடுகள் பங்கு கொள்ளும் ஏசியன் சம்பியன் சிப் போட்டியில் விளையாடுவதற்காக பங்களாதேஷ் தலைநகர் டாக்கா செல்லும் இலங்கை கூடைப்பந்தாட்ட தேசிய அணியில் வவுனியா இளைஞனும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கூடைப்பந்தாட்ட தேசிய அணியின் 18 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த கந்தவநேசன் கவிலவன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தடகளம், பூப்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுக்களில் மாகாண மட்டத்தில் பல பதக்கங்களைப் பெற்று தேசிய ரீதியிலும் கபிலவன் விளையாடியிருந்தார். வவுனியா மாவட்டத்தில் ஒழுங்கான கூடைப்பந்து திடலோ, பயிற்சியாளரோ இல்லாத நிலையில் தனது விடா முயற்சி காரணமாக குறித்த இளைஞன் கூடைப்பந்தாட்டத்தில் தேசிய அணியில் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.