Breaking

Post Top Ad

Friday, July 13, 2018

மானியமாக வழங்கிய வீடுகளுக்கு அடிக்கல் நடுகை

திருகோணமலை, மாவட்டத்தில் சேருவிலத் தொகுதி, சூரியபுர பகுதியில்  5 இலட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்பட்ட இடங்களில் வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று முன்தினம்(11) காலை இடம்பெற்றது.

இவ் வீடுகளுக்கான அடிக்கல்லை  சேருவிலத் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி முதன்மை அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான வைத்தியர் அருண சிறிசேன நட்டு வைத்தார்.

இவ் வீட்டுத் திட்டத்திற்கு  மேலும் 30 பக்கற் சீமெந்தும் மானியமாக வழங்கப்பட்டுள்ளதுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், வீடமைப்பு மற்றும் நீர்மாணத்துறை அமைச்சர் சஜீத் பிரேமதாச அவர்களின் அமைச்சியின் நிதி ஒதுக்கீட்டில் இந் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages