Breaking

Post Top Ad

Tuesday, July 10, 2018

நகைக் கடையில் கணக்காளராக பணியாற்றிய பெண் வீட்டிலிருந்து சடலமாக மீட்பு

ஏறாவூர் பொலிஸ் பிரிவு மயிலம்பாவெளி கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து குடும்பப் பெண்ணொருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மயிலம்பாவெளிக் கிராமத்தைச் சேர்ந்த திருமதி தயாநிதி  வசந்தகுமார்  (வயது 35) எனும் குடும்பப் பெண்ணின் சடலமே திங்கட்கிழமை 09.07.2018 மீட்கப்பட்டுள்ளது.

இவருக்கு 8ஆம் தரத்தில் கற்கும் ஒரு பெண் பிள்ளையும் உண்டு என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கலடியிலுள்ள நகைக் கடை ஒன்றில் கணக்காளராக இவர் வேலை பார்த்து வந்துள்ளார்.

சடலம் உடற்கூறாய்வுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages