Breaking

Post Top Ad

Tuesday, July 17, 2018

செய்திகள் அஸ்மின் போன்றவர்கள் தமிழினத்தினை கூறுபோட முற்படக் கூடாது: அனந்தி

“தன் இன மக்களால் நிராகரிக்கப்பட்டு, பின்கதவால் அரசியலுக்குள் பிரவேசித்தவர்கள் நான் துப்பாக்கியை பெற்றுக் கொண்டதை மக்கள் முன்னிலையில் நிரூபித்துக் காட்ட வேண்டுமே அன்றி தமிழினத்தினை கூறுபோட முற்பட கூடாது” என வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.



பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் அனந்தி சசிதரன் கைத்துப்பாக்கி வைத்திருப்பதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின், நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வட. மாகாண சபையின் விசேட அமர்வின் போது தெரிவித்திருந்தார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள மறுப்பறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“என்னிடத்தில் எந்தவகையான துப்பாக்கிகளும் இல்லை. மக்கள் என்மீது கொண்டிருக்கின்ற அன்பினை ஜீரணிக்க முடியாத அரசியல் காழ்ப்புணர்ச்சியாளர்களே பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். நான் அரசியலில் பிரவேசித்த காலம் முதல் எனது பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றமையை உலகம் அறியும்.

எனக்கு உரிய பாதுகாப்பு வழங்குங்கள் என்று உரிய தரப்பினரிடத்தில் நான் கோரிக்கைகளை முன்வைத்திருந்தேன். ஆனால் அந்தப் பாதுகாப்பினை நான் முழுமையாக நம்பியிருக்கவில்லை. எனது கைகளும், எனது உறவுகளும்தான் எனக்கு பாதுகாப்பு என்பதில் அதீத நம்பிக்கை கொண்டிருக்கின்றேன்.

என தெரிவித்தார்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages