Breaking

Post Top Ad

Sunday, July 8, 2018

விஜயகலா எம்.பியால் வீரவன்சவுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து! சூடு பிடிக்கும் கொழும்பு அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோருக்கு நாடாளுமன்றம் செல்ல தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்து தொடர்பில் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன ரணவீரவின் நடத்தை தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
எதிர்வரும் 11ஆம் திகதி கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வின் போது இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
குறித்த இருவரும் குற்றவாளிகளாக பெயரிடப்பட்டால் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இருவரும் குற்றவாளிகளாக பெயரிடப்பட்டால், உரிய காலப்பகுதியில் நாடாளுமன்றத்திற்கு செல்ல தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் விமல் வீரவன்சவை, நாடாளுமன்றத்தில் வைத்து சபாநாயகர் எச்சரித்திருந்தார்.

சமகாலத்தில் விடுதலைப் புலிகளின் அவசியம் குறித்து முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்த விவகாரம் தென்னிலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நாடாளுமன்றத்திலும் அதன் தாக்கம் பிரதிபலித்தது.

இதன்போது விஜயகலா மகேஸ்வரனை நாடாளுமன்றத்தில் இருந்த அகற்ற வேண்டும் என விமல் வீரவன்ச கோஷம் எழுப்பியிருந்தார். இதன்போது குண்டு வைத்து நாடாளுமன்றத்தை அழிக்க வேண்டும் என நீங்கள் கூறிய கூற்றை மறந்து விட்டீர்களா என சபாநாயகர், வீரவன்சவை எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages