Breaking

Post Top Ad

Monday, July 30, 2018

கரடியின் பிடியிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய குடும்பஸ்தர்.

திருகோணமலை கன்னியா வனப்பகுதியில் தேன் சேகரிக்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் கரடிகளிடம் சிக்கி, தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார். கடுமையான காயமடைந்த இவர், மருத்துவ சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியிருக்கிறார்.

மூதூர் கிழக்கில் நீனாக்கேணிக் கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் மகேந்திரன் என்பவர் தனது பரம்பரைத் தொழிலான தேன் சேகரிக்கும் தொழிலை செய்து வருகிறார். கடந்த 26ம் திகதி கன்னியா வனப்பகுதியில் தேன் சேகரித்துக் கொண்டிருந்தபோது, இரண்டு கரடிகளிடம் தற்செயலாக சிக்கிக் கொண்டார்.

கரடி தாக்குதலிற்கு இலக்காகிய நிலையில், ஒருவாறு தப்பி வந்தவர்,  திருகோணமலை ஆதார வைத்திய சாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிள்ளார்.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages