இத்திட்டத்தின்கீழ் ஏறாவூர் பிரதேசத்தில் விவசாய போதனாசிரியை முர்ஷிதா சிறீன் தலைமையில் நடைபெற்ற காளான் அறுவடைவிழாவில் மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.பரமேஸ்வரன், விவசாய உதவிப்பணிப்பாளர் ஏ. சுகந்ததாசன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகாலப்பகுதியில் விவசாய திணைக்களத்தின் விழிப்பூட்டலுடன் கல்லடி, ஜெயந்திபுரம், சத்துருக்கொண்டான், வவுணதீவு, காத்தான்குடி, ஏறாவூர், வந்தாறுமூலை, நரிப்புல்தோட்டம், கிரான் மற்றும் தியாவட்டவான் போன்ற பிரதேசங்களில் காளான் உற்பத்தி அதிகளவில் நடைபெறுகின்றது.
காளான் காலத்தின் தேவைக்கேற்ற மற்றும் நோய்கள் அதிகம் ஏற்படாத பயிராகக் கொள்ளப்படுவதுடன் அதிக புரத சக்தியை அதிகரிக்கக்கூடிய உணவாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
குறுகிய நிலப்பரப்பில் பயிரிட்டு குறுகிய காலத்தில் அறுவடை செய்யக்கூடியது என்பதனால் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு சிறந்த வாழ்வாதாரத் தொழிலாகவும் அமைந்துள்ளது.
காளான்கள் ஒரு மாதகாலத்தில் முதலாவது அறுவடை செய்யலாம் அதையடுத்து வாரத்திற்கு ஒரு முறை அறுவடை செய்யக்ககூடியதாக இருக்குமென தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.