மட்டக்களப்பு மாவட்டவான் மாயவட்டைத் தெற்குக் கண்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற காலபோக வேளான்மைச் செய்கை அறுவடை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் நடராஜா சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு கமநலப் சேவைப் பிரிவில் 14 விவசாயக் கண்டங்களில் மொத்தம் 1400 ஹெக்டயர் வேளாண்மை செய்கை பண்ணப்பட்டது. இதில் மாயவட்டை தெற்குக் கண்டத்தில் 300 ஏக்கர் செய்கை பண்ணப்பட்டது
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் - அரசியல் உரிமை மாதிரி அபிவிருத்தி உரிமையும் சிறபான்மை மக்களுக்குத் தேவை அதற்காகத்தான் இணக்க அரசியலில் ஈடுபட்டு வருகிறோம்.ஆனால் தற்போது அரசியலில் குழப்பகரமான நிலைமை தோன்றியுள்ளது. அவசகுனமான நிலைமைகள் தோன்றினாலும் உலக அரசியலில் பல விடயங்கள் மாற்றியமைக்கப்படும்.
இந்த நாட்டின் அரசியல் மாற்றமடைந்தாலும் புதிய அரசியல் அமைப்பு அமைக்கப்படாவிட்டால் இந்நாட்டிற்கு ஒரு சாபக்கேடு எனவே இந்த நாட்டின் பொருளாதாரம் அரசியல் மாற்றங்களால் சீரழியும் என்றார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.