அம்பாறை, அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலயத்தில் கல்விப் பொதுத் தராதர உயர்தர விஞ்ஞானப் பிரிவை ஆரம்பிப்பதற்கு, கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளதாக பாடசாலையின் அதிபர் கே.எல். உபைதுல்லாஹ், இன்று (02) தெரிவித்தார்.
01.01.2018ஆம் திகதி முதல் செல்லுபடியாகும் விதத்தில் க.பொ.த உயர்தர விஞ்ஞானப் பிரிவை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு, இப்பாடசாலையின் கட்டமைப்பு வகை 1ஏபி (1-13) என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான கடிதம், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ. நிஸாமினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆகக் குறைந்தது 15 மாணவர்கள் விஞ்ஞானப் பிரிவில் கற்றல், இவர்கள் யாவரும் அடிப்படைக் கல்வித் தகைமைகளை முழுமையாகப் பூர்த்தி செய்தவர்களாக இருத்தல் வேண்டுமெனவும், அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உடனடியாக உயர்தர விஞ்ஞானப் பிரிவை ஆரம்பித்து, அதன் அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ. நிஸாம் கேட்டுள்ளதாகவும், அதிபர் கே.எல். உபைத்துல்லாஹ் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.