Breaking

Post Top Ad

Monday, July 9, 2018

றெஜினாவின் கொலைக்கு நீதி கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம், சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி சிவனேஸ்வரன் றெஜினாவுக்கு நீதி வழங்குமாறு கோரி, மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பால், மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி பூங்காவுக்கு முன்னால், ஆர்ப்பாட்டமொன்று இன்று (09) மேற்கொள்ளப்பட்டது.

வலையமைப்பின் இணைப்பாளர் திருமதி இந்திரன் ஜெயசிலி தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இருந்து பெண்கள் கலந்துகொண்டனர்.

பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்; தொடர்ச்சியாக சிறுவர்களும் பெண்களும் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்படல் வேண்டு​ம்; இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடுவர்களுக்கு எதிராக உரிய தண்டனை வழங்கப்படல் வேண்டும் என, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் வலிறுத்தினர்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages