
ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட கணவனை இழந்த விதவைக் குடும்பம் ஒன்றிற்கும் சிறு நீரகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நடமாடி முடியாத நிலையிலுள்ள ஒருவரின் குடும்பத்திற்கும் வியாழக்கிழமை 05.07.2018 தலா 35000 ரூபாய் பெறுமதியான சிறு கடை வியாபாரத்திற்குரிய பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அந்-நூர் அறக்கொடை ஸ்தாபனத்தைச் சேர்ந்த சமூக சேவையாளர்களான எம்.எல்.எம். அப்துல் றஹ்மான், ஏ.எம். சலீம் ஆகியோரும், ஏறாவூர் நகர சபையின் முன்னாள் பிரதி மேயர் ஐ. தஸ்லிம் உட்பட பயனாளிக் குடும்பங்களும் கலந்து கொண்டனர்.
நலிவுற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஏறாவூர் நகரம் மற்றும் ஏறாவூர்ப் பற்று ஆகிய இரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமிருந்தும் தெரிவு செய்யப்பட்ட சுமார் 23 குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாவுக்குக் குறையாத சுய தொழில் முயற்சிக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் அது வெற்றியளித்துள்ளதாகவும் அப்துர்ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.