Breaking

Post Top Ad

Wednesday, July 18, 2018

மின்கம்பத்துடன் மோதுண்டு கார் விபத்து இருவர் படுகாயம்

(எச்.ஹாசன்)
ஏறாவூர் பொலிஸ் பிரிவு மட்டக்களப்பு – கொழும்பு வீதி செங்கலடியில் புதன்கிழமை  அதிகாலை 2 மணியளவில் இடம் பெற்ற வீதி விபத்தொன்றில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பை நோக்கி வந்து கொண்டிருந்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதி மருங்கிலிருந்த மின் கம்பத்துடன் மோதுண்டு நொருங்கியுள்ளது.


இந்த விபத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த முஹம்மத் இப்றாஹிம் றிஸ்வான் (வயது 35) மட்டக்களப்பு, ஊறணியைச் சேர்ந்த அப்புஹாமி வில்லியம் சிங்ஹ ஹேமாவதி (வயது 35) ஆகிய இருவருமே படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டள்ளனர்.

இதேவேளை இக்காரின் பின்னிருக்கை ஆசனத்தில் அமர்ந்திருந்து பணயம் செய்த தந்தை மற்றும் அவரது 4 மற்றும் 7 வயதான இரு சிறுவர்களும் எதுவித காயங்களுமின்றித் தப்பியுள்ளனர்.

கார் பலத்த சேதமடைந்துள்ளது.

இச்சம்பவம்பற்றி ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.










No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages