Breaking

Post Top Ad

Sunday, July 8, 2018

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்படாவிடின் போராட்டத்தில் இறங்குவோம்!


இந்த நாட்டில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு தொழில் ரீதியில் அதிகம் பிரச்சனைகள் உள்ளன,   பல வருடமாக  அவர்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்த்து வைக்காமல் அரசாங்கம்   இழுத்தடித்துக்கொண்டே போகின்றது. 


எங்கள் பிரச்சனைகளை  மிக விரைவாக தீர்த்துவைக்க உறுதியளிக்கப்படாவிடின் நாம்  அகில இலங்கை ரீதியில் எமது தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பிப்போம். என அகில இலங்கை சமுர்த்தி மற்றும் விவசாய ஆராய்சி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் கீர்த்திசிறி கமகே  தெரிவித்தார்.
அகில இலங்கை சமுர்த்தி மற்றும் விவசாய ஆராய்சி உத்தியோகத்தர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர் சங்க நிருவாக உறுப்பினர்களின் கூட்டம் .. காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சனிக்கிழமை  7ஆம் திகதி மாவட்ட தலைவர் நல்லதம்பி ரவீந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில்கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

இலங்கையில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமான சமுர்த்தி உத்தியோகத்தர் பத்து வருடங்களுக்கு மேலாக தமது கடமைக்கு மேலதிகமாக பதில் கடமையாற்றிவருகின்றார் அவ்வாறானவர்களுக்கு பதில் கடமைக்கான சம்பளங்கள் வழங்கப்படவில்லை, ஓய்வு பெற்றவருக்கு ஓய்வூதியம் இல்லை, மரணமடைந்த உத்தியோகத்தர்களின் குடும்பத்திற்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை, அடிப்படை சம்பளத்தில் சேர்க்க வேண்டிய பெறுமதி சேர்க்கப்படவில்லை, நியமனக் கடிதப் பிரச்சனை தீர்க்கப்படவில்லை, இவ்வாறு அகில இலங்கை ரீதியில் கடமையாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு பல பிரச்சனைகள் உள்ளன. இந்தப் பிரச்சனைகள் எல்லாவற்றையும் சுமந்துகொண்டுதான் அவர்கள் பணியாற்றுகின்றார்கள். இந்த விடயங்கள் பலருக்கு தெரியாமலும் இருக்கலாம்.

சமுர்த்தி உத்தியோகத்தர் கடமைகள் பெறுப்புக்கள் தொடர்பில் சமுர்த்தி திணைக்களத்தால் அல்லது அரசாங்கத்தால் வௌியிடப்படும் சுற்றுநிருபங்கள் முழு இலங்கைக்கும் பொதுவானதாகும்,  அது அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் பொருத்தமானதாக அமையும், ஆனால் சில மாவட்டங்களிலும் மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களிலும் ஒன்றுக்கொண்று வேறுபட்ட வகையில் பணியாற்றுகின்றனர்.

மாவட்டத்திற்கு ஒன்று என சுற்று நிருபங்கள்  இல்லை முழு இலங்கைக்கும் ஒரே மாதிரியான சுற்றுநிருபந்தான் உள்ளது.

கிராமசேவகர் பிரிவுகளுக்குச் சென்று கடமை புரிபவர்கள் வௌிக்கள உத்திகேத்தர்கள்தான் ஆனால் அவ்வாறான உத்தியோகத்தர்கள் அலுவலகத்தில் கடமையாற்றுபவர்கள் போல் சில பிரதேச செயலகங்களில்  நடாத்தப்படுகின்றனர்.


மாவட்ட ரீதியில் அல்லது பிரதேச ரீதியில் பலர் எமக்கு பிரச்சனைகளை எழுத்து மூலம் தெரியப்படுத்துவதில்லை. தேசிய சங்கத்துடன் மாவட்ட சங்கத்தினர் தொடர்புகளை பேணும்பட்சத்தில் மாவட்ட ரீதியில் பணியாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களின் கடமை தொடர்பான பிரச்சனைகளை விரைவாக தீர்த்துக்கொள்வதற்கு உதவியாக இருக்கும்.


எமது சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சனைகள் தொடர்பில் எதிர்வரும் ஓரிரு மாதத்திற்குள் எமது சமூக வலுவூட்டல் அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து தொழிற்சங்க ரீதியில் நாங்கள் பேசவுள்ளளோம். இந்தப் பேச்சுவார்த்தை வெற்றியளிக்காவிடின் அகில இலங்கை ரீதியில் எமது தொழிற்சங்க போராட்டம் ஆரம்பமாகும். என தெரிவித்தார்.











No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages