
எனினும் நிலக்கடலை விதை உற்பத்தி வலயங்களை உருவாக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருகி;ன்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை செய்கைபண்ணப்பட்ட நிலக்கடலை அறுவடை செய்யும் உத்தியோகபூர்வ விழா சித்தாண்டி - சந்தனமடு ஆறு பிரதேசத்தில் மாவட்ட விவசாய பணிப்பாளர் ரீ.பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு வடக்கு விவசாய உற்பத்தியாளர்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் செவ்வாய்கிழமை (24) நடைபெற்ற இந்நிகழ்வில் விவசாய போதனாசிரியர் எஸ். சுதாகரன் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர்ப்பற்றுஇ கிரான், போரதீவுப்பற்று, களுவாஞ்சிக்குடி போன்ற பிரதேசங்களில் நெல் அறுவடையை அடுத்த காலப்பகுதியில் நிலக்கடலை செய்கைபண்ணப்படுகிறது.
இம்முறை ஆயிரத்து நூறு ஏக்கரில் மாத்திரம் நிலக்கடலை செய்கை பண்ணப்பட்டபோதிலும் முறையான நீர்ப்பாசனம் கிடைக்காமை மற்றும் வரட்சி காரணமாக குறைந்தளவு அறுவடை கிடைத்துள்ளதாக மறுவயற்பயிர் பாடவிதான உத்தியோகத்தர் என். கணேஷமூர்த்தி தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.