Breaking

Post Top Ad

Wednesday, July 4, 2018

விஜயகலாவை கைதுசெய்யக் கோரி மூன்று முறைப்பாடுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதே தமது முக்கிய நோக்கம் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரி­வித்த சர்ச்­சைக்­கு­ரிய கருத்து தொடர்பில் அவரை உட­ன­டி­யாக கைது செய்­யு­மாறு பொலிஸ் தலை­மை­ய­கத்­துக்கு நேற்யை தினம் மூன்று முறைப்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.



பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ரவின் அலு­வ­ல­கத்தில்  இம் மூன்று முறைப்­பா­டு­களும் நேற்று  பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அது தொடர்பில் ஆராய்ந்து விரைவில் பொலிஸ் மா அதிபர் அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­யினை எடுப்பார் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் விடுக்கும் வண்ணம் சிறுவர்  விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் நடந்­து­கொண்­டுள்­ளதால் அவரை உடன் கைது செய்­யு­மாறு சிங்­ஹல ராவய அமைப்பு முறைப்­பாடு ஊடாக பொலிஸ் மா அதி­பரைக் கோரி­யுள்­ளது.

அத்துடன் பிவித்துரு ஹெலஉறுமய சார்பிலும் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

அர­சி­ய­ல­மைப்பை மீறும், பயங்­க­ர­வாத தடைச் சட்டம், தண்­டனை சட்டக் கோவை, சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் தொடர்­பி­லான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் கீழ் தண்­டனைக்குரிய குற்­றத்தை இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் புரிந்­துள்­ள­தாக கூறி அவரை உடன் கைது செய்து நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு வலி­யு­றுத்தி உண்­மையை கண்­ட­றியும் அமைப்பு பொலிஸ் மா அதி­ப­ரிடம் முறைப்­பா­ட­ளித்­துள்­ளது. 

 மூன்று நாட்­க­ளுக்குள்  குறித்த விடயம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் நட­வ­டிக்கை எடுக்கத் தவ­றினால், அடுத்­த­கட்­ட­மாக தாம் நீதி­மன்றை நாட­வுள்­ள­தாக முறைப்­பா­ட­ளித்த பின்னர் மாகல்­கந்தே சுதத்த தேரர் கூறினார்.

 இதே­வேளை சட்­டத்­த­ர­ணி­களை உள்­ள­டக்­கிய உண்­மையை கண்­ட­றியும் அமைப்பின் தலைவர் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி பிரே­மநாத் சீ தொல­வத்த தலை­மையில் பொலிஸ் தலை­மை­யகம் சென்ற சட்­டத்­த­ர­ணிகள் குழுவும் நேற்று  பொலிஸ் மா அதி­ப­ருக்கு விஜ­ய­கலா மகேஸ்­வரன் தொடர்பில் முறைப்­பாடு செய்­தது.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages