Breaking

Post Top Ad

Saturday, July 7, 2018

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பில் ஜனாதிபதி

96ஆவது சர்வதேச கூட்டுறவு தினம் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ஆரம்பமாகியது.
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் வழிகாட்டலின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வில் றிஸாத் பதியூதீன், அலிசாஹீர் மௌலானா, ஏ.எல.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு வெபர் மைதானத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு மட்டக்களப்பில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages